சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கிய இளம் நாயகி : இவங்களும் சீரியலுக்கு வந்துட்டாங்களா?
ஆக 24, 2022
Advertisement
தமிழ் சினிமாவில் "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை வெண்பா. தொடர்ந்து "கற்றது தமிழ்" படத்திலும் குட்டி ஆனந்தியாக நடித்து பாராட்டுகளை பெற்றார். குழந்தை நட்சத்திரமாக மட்டுமே 10 படங்கள் வரை நடித்துள்ள வெண்பா, டீனேஜ் வயதில் "காதல் கசக்குதய்யா" என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் கொள்ளை கொள்ளும் பேரழகால் தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார். தொடர்ந்து "பள்ளிப் பருவத்திலே", "மாயநதி", "ஆயிரம் ஜென்மங்கள்" ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்திருந்தாலும் அவருக்கு ஹீரோயின் மார்க்கெட்டில் பெரிய அளவில் வரவேற்பில்லை.
இந்நிலையில், வெண்பா தற்போது சின்னத்திரையின் பக்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. அவர் தற்போது, ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள "சந்தியாராகம்" என்கிற தொடரில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகைகள் சினிமா நடிகைகளை விட பெயர், புகழ் பெற்று பிரபலங்களாக வலம் வரும் நிலையில், வெண்பாவின் இந்த சீரியல் என்ட்ரி திரைத்துறையில் அவருக்கு இரண்டாவது இன்னிங்சாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!