
விரைவில் ரீ-என்ட்ரி : ஜிம்மில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் ராகவேந்திரன் புலி
மார் 02, 2023
Advertisement
சின்னத்திரை நடிகரான ராகேவந்திரன் புலி "கனா காணும் காலங்கள்", "காற்றுக்கென்ன வேலி" உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். காமெடி நடிகர் ப்ளாக் பாண்டி போல இவரும் ஒரு ரவுண்டு வருவார் என பலரும் எதிர்பார்த்தனர். சீரியலில் நடித்துக்கொண்டிருந்த ராகவேந்திரன் நடிப்பதில் போதிய வருமானம் கிடைக்காததால் திரைத்துறையை விட்டே விலகி வேறு வேலைக்கு செல்வதாக அண்மையில் அறிவித்திருந்தார். இனி நடிக்கவேமாட்டேன் என விரக்தியில் பதிவிட்டிருந்த ராகவேந்திரன் தற்போது புதிய புராஜெக்ட் ஒன்றில் கமிட்டாகியிருக்கிறார். அதற்காக உடல் எடையை அதிகரித்துக் கொண்டிருக்கும் அவர் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ராகவேந்திரனின் இந்த ரீ-என்ட்ரி வெற்றியடைய வேண்டும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!