
சண்டைய மறந்து ஒன்றிணைந்த நக்ஷத்திரா - ஸ்ரீநிதி
மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளிவந்த ஸ்ரீநிதி அதன்பின் சீரியல்கள் எதிலும் கமிட்டாகவில்லை. இன்ஸ்டாகிராமில் மட்டும் போட்டோ, வீடியோ என ஆக்டிவாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ஸ்ரீநிதியும் நக்ஷத்திராவும் ஒரே மாதிரியான கருப்பு உடை அணிந்து ஒன்றாக சேர்ந்து நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நக்ஷத்திரா தற்போது கர்ப்பமாக உள்ள சூழலில் அவரை சந்தித்துள்ள ஸ்ரீநிதி தங்கள் பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டதாக தெரிகிறது. ஒருவழியாக தோழிகள் இருவரும் மீண்டும் இணைந்திருப்பதை பார்த்து "இதுதாங்க நட்பு" என சல்யூட் அடித்து வருகின்றனர் ரசிகர்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!