உண்மைச் சம்பவ கதையில் உருவாகி உள்ள வில் வித்த
ஜூன் 30, 2023
Advertisement
தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா படங்களை இயக்கிய ஹரி உத்ரா இயக்கி உள்ள புதிய படம் வில் வித்த. இதில் அருண் மைக்கேல் டேனியல், ஆராத்யா, ஜானகி, வைஷ்ணவி, குணா, எஸ்.எம்.டி.கருணாநிதி, கெழுவை சுரேஷ் குமார் நடித்துள்ளனர். சிவகுமார் கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஜே.அலி மிர்சாக் இசை அமைத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் ஹரி உத்ரா கூறியதாவது: உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், சைக்கோ திரில்லர் கதையுடன் "வில் வித்த" படம் உருவாகி உள்ளது. இதில், ஹெல்த் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய அருண் மைக்கேல் டேனியல், கலையார்வம் காரணமாக அந்தப்பணியை ராஜினாமா செய்துவிட்டு, இதில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், ராமநாதபுரம், பரமக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் 7ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!