
மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியான த்ரிஷா
தற்போது சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான "புரோ டாடி" என்ற படத்தின் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது. இதில் சிரஞ்சீவி மனைவியாக த்ரிஷா நடிக்கிறார். 50 வயதை கடந்த பிறகு ஒரு குழந்தைக்கு தந்தையாகும் கதை. அதே நேரத்தில் அவரது மகனும் தந்தை ஆகிறார். மலையாளத்தில் மோகன்லால் மகனாக பிருத்விராஜ் நடித்திருந்தார். ரீமேக்கில் நடிப்பது யார் என்று இன்னும் அறிவிக்கவில்லை.
2006ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்திருந்தார் த்ரிஷா. தற்போது 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!