நவம்பர் மாதம் மறக்க முடியாதது - கீர்த்தி சுரேஷ்
டிச 03, 2023
Advertisement
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடந்த நவம்பர் மாதம் மறக்க முடியாத ஒரு மாதம் என பதிவிட்டுள்ளார்.
“தீபாவளி கொண்டாட்டம், அப்பா, அம்மாவின் பிறந்தநாள், திரையுலகில் என்னுடைய 10 ஆண்டுகள் என நிறைவடைந்தது. நவம்பர் மாதம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீபாவளி கொண்டாடியது, அவருடைய அப்பா, அம்மா பிறந்தநாளைக் கொண்டாடியது, கோயிலுக்குச் சென்றது, நண்பர்களுடன் கொண்டாட்டம் என சில பல புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் "சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!