
சில்க் ஸ்மிதாவின் பயோபிக்கில் நடிக்கும் சந்திரிகா ரவி
அதன்பிறகு சில்க் ஸ்மிதா பற்றிய கதைய அம்சத்துடன் சில படங்கள் வெளியாகின. குறிப்பாக 2011ல் பாலிவுட்டில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான "தி டர்ட்டி பிக்சர்" படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவானது. அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வித்யா பாலனுக்கு திருப்புமுனையாகவும் அமைந்தது.
இந்த நிலையில் தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு புதிய படமாக உருவாகிறது. படத்திற்கு "சில்க் ஸ்மிதா ; தி அன்டோல்ட் ஸ்டோரி" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சில்க் ஸ்மிதாவின் 63 வது பிறந்தநாளான நேற்று இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் சோசியல் மீடியா புகழ் சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் சில்க் ஸ்மிதா போன்ற உருவத்தோற்றம் கொண்டவர் என்பதால் அவரையே இந்த படத்தின் கதாநாயகியாக மாற்றி விட்டார்கள். ஜெயராம் என்பவர் இயக்கும் இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகும் விதமாக தயாராகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!