
டாக்சிக் வெளியீட்டு அறிவிப்பு வந்தது : ஜனநாயகன் அறிவிப்பு எப்போது?
முதல்வர் விஜய்யின் கடைசி படமான "ஜனநாயகன்" படத்தை இந்நிறுவனம்தான் தயாரித்துள்ளது. இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இப்படத்தின் அறிவிப்பை வெளியிடாமல் "டாக்சிக்" படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
"ஜனநயாகன்" சென்சார் சான்றிதழ் பற்றி விசாரிக்க இப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் டில்லி சென்றிருந்தார். தலைமை அலுவலக அதிகாரிகளை சந்தித்து அதன் சிக்கல்களைத் தீர்க்க அவர் முயற்சிப்பார் என்றார்கள். இருப்பினும் அந்த சிக்கலை அவரால் தீர்க்க முடியவில்லையா என்பது தெரியவில்லை. அப்படி தீர்த்திருந்தால் இன்று "ஜனநாயகன்" படத்தின் வெளியீட்டு விஜய்யின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்குக் கிடைத்திருக்கும்.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்இன்றைய நாளில் ஜனநாயகன் படம் வெளிவந்தால் அதில் அவர் முந்தைய திமுக அரசை நோக்கி பேசிய வசனங்கள் எல்லாமே இன்று இவரது ஆட்சியிலும் தொடருகிறதே என்ற விமர்சனம் வந்துவிடுமோ.. எதிர்கட்சிகளுக்கு நாமே மெல்லுவதற்கு அவல்பொரி கொடுத்தது போல் ஆகிவிடுமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்..