
இரண்டு வானம் படத்தை பார்த்து அழுத விஷ்ணு விஷால்!
நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள "கட்டா குஸ்தி" படம் ஜூலை 3ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி பிஸியாக யூடியூப்பில் பல சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில் "இரண்டு வானம்" படம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதன்படி, ""இரண்டு வானம் முழு படத்தையும் சமீபத்தில் பார்த்தேன். உண்மையாகவே நிறைய அழுதுவிட்டேன். மூன்று ஆண்டுகள் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறேன். இயக்குனர் ராம்குமார் உருவாக்கிய இந்தக் கதை எனக்குள் ஒரு வலியையும், ஆழமான உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை திரையில் காணும்போது, அந்த வலி, காதல், உணர்வுகள் அனைத்தையும் நிச்சயம் உணர்வார்கள் என நம்புகிறேன்"" எனத் தெரிவித்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!