டாக்சிக் : மீண்டும் தள்ளி வைப்பு
ஏப் 29, 2026
Advertisement
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னடப் படம் "டாக்சிக்".
இந்தப் படம் முதலில் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின் திடீரென ஜுன் 4ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். இதனிடையே, கடந்த சில வாரங்களாக இந்தப் படம் மீண்டும் தள்ளி வைக்கப்படலாம் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன.
அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது மீண்டும் தள்ளி வைத்துள்ளது பற்றி அறிவித்துள்ளார்கள். இருந்தாலும் இந்த முறை படம் எப்போது வெளியாகும் என்று எந்தத் தேதியையும் குறிப்பிடாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமைக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. அதனால் தான் படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!