இன்னைக்கு இத்தனை படங்கள் ரிலீசா...?
ஆக 21, 2026
Advertisement
இருதினங்களுக்கு முன் இந்தவாரம் வெளியாகும் தமிழ் படங்கள் பற்றிய செய்தியை வெளியிட்டு இருந்தோம். இப்போது தெலுங்கு, மலையாளம் மொழி படங்களையும் சேர்த்து இன்று வெளியாகும் படங்களின் பட்டியல் இது....
இன்று ஆகஸ்ட் 21ம் தேதி கொஞ்சம் அதிகமான எண்ணிக்கையில் படங்கள் வெளியாகி உள்ளன. ரியோ ராஜ், வத்திகா நடித்த "ராம் அண்ட் லீலா", புதுமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா நடித்த "மொத ராத்திரி", ஒரே ஒருவர் 74 துறைகளை கையாண்டு இயக்கிய "ஒன் மேன்" மற்றும் தெலுங்கில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் நடித்த டப்பிங் படமான "இருமுடி", மலையாளத்தில் பிருத்விராஜ், மாளவிகா நடித்த "கலீபா", நிவின்பாலி, மமிதா பைஜூ நடித்த "பெத்லகேம் குடும்ப யூனிட்"ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
இந்த படங்கள் தவிர, ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய "சோளக் கொல்லை பொம்மை", புதுமுகங்கள் நடித்த "முன்தினம்", ஆங்கில படமான "இன்சிடியஸ்" ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன. இளன் இயக்கி நடித்த "பியார் பிரமோ காதல்" படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
ஓணம் பண்டிகை வருவதாலும், அடுத்த வாரம் டாக்சிக் ரிலீஸ் என்பதாலும் இந்த வாரம் இவ்வளவு படங்கள். இதில் எந்த படத்துக்கும் பெரிய ஓபனிங் இல்லை. மொத ராத்திரி படத்துக்கும் மட்டும் ஓரளவு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த வாரங்களில் வந்த படங்களில் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" பல தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. அடுத்தவாரம் புதன்கிழமை டாக்சிக் வருவதால் இதில் பல படங்களை செவ்வாய்கிழமையுடன் தியேட்டரில் இருந்து துாக்க வேண்டிய நிலை வரலாம்

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!