
டாக்சிக் முன்பதிவிற்கு வரவேற்பு
நாடு முழுவதும் டாக்சிக் படத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், தனியார் புக்கிங் இணையதளத்தில் டாக்சிக் படம் ஒரு மணி நேரத்திற்குள் 21.71 ஆயிரம் டிக்கெட்டுகள் என்ற வீதத்தில் விற்கப்பட்டு, பிரம்மாண்டமான வசூல் தொடக்கத்திற்கு வித்திட்டுள்ளது. யஷின் இந்த படத்திற்கு உள்ள எதிர்பார்ப்பை, இது மணிக்கு மணி அதிகரிக்கும் என டிக்கெட் விற்பனை தெளிவாகக் காட்டுகிறது. இப்படம் திரையரங்குகளுக்கு வர இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க முன்முன்பதிவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், நயன்தாரா, ஹூமா குரேஷி, தாரா சுடாரியா, சுதேவ் நாயர் உள்ளிட்ட பலர் இந்த டாக்சிக் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்காக, ஹாலிவுட்டின் முன்னணி ஸ்டன்ட் இயக்குநரான ஜேஜே பெர்ரி மேற்பார்வையில் டாக்சிக் படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகளுக்காக சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளார் யஷ். மேலும், இப்படத்தின் சர்வதேச பதிப்பிற்காக யஷ் தனது சொந்தக் குரலிலேயே ஆங்கிலத்தில் டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!