
நவம்பர் 5ல் வெளியாகும் ராமாயணா
நிதிஷ் திவாரி இயக்கத்தில், ஹன்ஸ் ஜிம்மர், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல், ரவி துபே, லாரா தத்தா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "ராமாயணா" படத்தின் முதல் பாகம் நவம்பர் 5ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவராத்திரியை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த அறிவிப்பில், தசரா முதல் முன்பதிவு ஆரம்பமாகும் என்றும், அனைத்து விதமான வடிவங்களிலும் அன்றைய தினம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்கள்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு போஸ்டரில் ராவணனாக நடிக்கும் யஷ், ராமர் ஆக நடிக்கும் ரன்பீர் கபூர், சீதையாக நடிக்கும் சாய் பல்லவி, லட்சுமணன் ஆக நடிக்கும் ரவி துபே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியத் திரையுலகத்தில் இதுவரையில் எந்த ஒரு படமும் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் தயாரானதில்லை என்று சொல்லப்படும் அளவிற்கு சுமார் 4000 கோடியை செலவிட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!