
இரண்டாவது வாரத்தில் ஓம், லாபத்தைத் தருமா ?
இரண்டாவது வாரத்தில் அடியெடுத்துள்ள இந்தப் படம் தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்து விட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
உலக அளவில் இந்தப் படத்திற்கு 50 கோடிக்கும் அதிகமாக தியேட்டர் உரிமை விற்கப்பட்டுள்ளது. 100 கோடி வசூலைக் கடந்து 50 கோடிக்கும் சற்றே அதிகமான பங்குத் தொகையைக் கொடுத்துள்ளது. இன்னும் 5 கோடி கூடுதலாக பங்குத் தொகை வந்தால் இப்படம் லாபத்தைக் கொடுக்க ஆரம்பிக்கும் என்கிறார்கள்.
தமிழகத்தில் எதிர்பார்த்த வசூல் இல்லை என்று சொல்லப்பட்டாலும், தெலுங்கு மாநிலங்கள், கேரளாவில் இப்படம் எதிர்பார்த்ததை விடவும் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த "அமரன்" படம் பேசப்பட்டது போல இந்த "ஓம்" படம் பேசப்படவில்லை. இரண்டாவது பாதியில் இருந்த திரைக்கதையே அதற்குக் காரணம் என்பது விமர்சகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…