
மோகன்லாலை தொடர்ந்து மம்முட்டி ரசிகர்களும் அப்செட்
இந்நிலையில் சமீபத்தில் வந்த ‛ஓம்" படத்தில் மம்முட்டி நீண்ட இடைவேளைக்குபின் தமிழில் நடித்தார். அந்த படத்தில் அவர் கேரக்டர், நடிப்பு குறித்து பல்வேறு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தன. பல தேசிய விருது பெற்ற அவரை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சரியாக பயன்படுத்தவில்லை. கிளைமாக்ஸ் உட்பட பல இடங்களில் அவர் சும்மா இருக்கிறார். சாய் பல்லவிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மம்முட்டிக்கு கொடுக்கவில்லை என மலையாள ரசிகர்கள் தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தன.
படம் குறித்து மம்முட்டியும் இதுவரை பாசிட்டிவ்வாக எதுவும் பேசவில்லை. பேரன்புக்குபின் தான் நடித்த தமிழ் படம் அவருக்கு திருப்தி இல்லை என கூறப்படுகிறது. இரண்டு மலையாள , திறமையான நடிகர்களை தமிழ் சினிமா இயக்குனர்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மலையாள ரசிகர்கள் பீல் பண்ணுகிறார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…