எனக்கு உடல்நிலை பிரச்னையா : நடிகர் ரமேஷ் கண்ணா விளக்கம்
நவ 27, 2026
Advertisement
நடிகர், இயக்குனர் ரமேஷ் கண்ணாவுக்கு உடல்நிலை சரியில்லை. அவரால் சரியாக நடக்க முடியவில்லை. மற்றவர் உதவியுடன்தான் அவர் நடக்கிறார். அவருக்கு அந்த பிரச்னை, இந்த பிரச்னை என ஒரு வீடியோ வைரல் ஆனது. அதில் ஒருவர் கையை பிடித்தபிடி ரமேஷ் கண்ணா நடந்து வருகிற காட்சி இருந்தது. அதை தொடர்ந்து ரமேஷ் கண்ணா உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவியது.
இந்நிலையில், என்னதான் ஆச்சு என்று அவரை தொடர்பு கொண்டு கேட்டால் சிரிக்கிறார். அவர் கூறுகையில், ‛‛மழை காரணமாக ரோட்டில் தண்ணீர், சகதி. அதனால் ஒருவர் கையை பிடித்தபடி பாதுகாப்பாக நடந்தேன். அதை யாரோ வேறு கோணத்தில் வீடியோ எடுத்து தவறான தகவல்களை பரப்பிவிட்டார்கள். நான் நன்றாக ஆரோக்கியமாக இருக்கிறேன். இப்போதும் காமெடியனாக பல படங்களில் நடித்து வருகிறேன். கோபி சுதாகர் நடிக்கும் படம், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் உட்பட பல படங்கள் விரைவில் வர இருக்கின்றன். தொடர்ந்து நடிப்பேன். இதற்கிடையில் ஒரு வீடியோவால் இவ்வளவு பிரச்னை. அதை தவறாக புரிந்து கொண்டு நலம் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி"" என்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…