
தெலுங்கில் லாபத்தை ஆரம்பித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
தமிழை விடவும் தெலுங்கில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அங்கு 21 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட படம் 45 கோடி வசூலைக் கடந்துள்ளது. படத்திற்கான "பிரேக் ஈவன்" நடந்து தற்போது லாபத்தையும் ஆரம்பித்துள்ளது.
அதேசமயம் தமிழக வினியோக உரிமையாக சுமார் 40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதால், இப்படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்தால்தான் லாபத்தைத் தர முடியும். இந்த வார இறுதி வசூலும் நன்றாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அடுத்த வாரம் "டாக்சிக்" உள்ளிட்ட படங்கள் வருவதால் இன்னும் ஒரு வாரத்தில் எவ்வளவு வசூலாகிறதோ அதைப் பொறுத்தே படத்தின் வியாபார வெற்றி தெரிய வரும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!