மமிதா பைஜூவின் மற்றொரு படத்திற்கும் வரவேற்பு
ஆக 22, 2026
Advertisement
டியூட் படத்திற்கு பிறகு சூர்யாவுடன் நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் மமிதா பைஜூ. கடந்த 14 ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் 200 கோடி வசூலை நெருங்கி வருகிறது. ஆகஸ்ட் 26ம் தேதி யஷின் டாக்சிக் படம் தியேட்டர்களுக்கு வரும் வரை விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் நல்ல வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை அடுத்து ஒரு வார இடைவெளியில், மமிதா பைஜூவின் நடிப்பில் இன்னொரு படமும் நேற்று திரைக்கு வந்துள்ளது. நிவின் பாலியுடன் இணைந்து அவர் நடித்துள்ள மலையாள படமான பெத்லஹேம் குடும்ப யூனிட், ஆகஸ்டு 21ம் தேதியான நேற்று வெளியாகியுள்ளது. ரொமாண்டிக், காமெடி கதையில் உருவாகியுள்ள இப்படம் முதல் நாளில் 4.70 கோடி வசூலித்து நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இப்படத்தை பிரேமலு படத்தை இயக்கிய கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!