ஒளிப்பதிவாளரை விவாகரத்து செய்த நடிகை
ஏப் 03, 2024
மலையாள சினிமாவின் முக்கியமான நடிகை மஞ்சு பிள்ளை. பழம்பெரும் நடிகர் எஸ்.பி.பிள்ளையின் மகள். குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். சிநேகிதியே, மன்மதன் அன்பு உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் முகுந்தன் என்ற தொலைக்காட்சி நடிகரை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 2000மாவது ஆண்டில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவை திருமணம் செய்து கொண்டார். சுஜித், கேரளா கபே, த்ரிஷ்யம், லூசிபர், மிஸ் இந்தியா உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் "பாபநாசம்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார். ஜேம்ஸ் அண்ட் அலைஸ் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சு பிள்ளையும், சுஜித்தும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது. இதனை இருவரும் மறுக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதை சுஜித் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நானும், மஞ்சு பிள்ளையும் பிரிந்து விட்டோம். விவாகரத்து பெற முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். தற்போது அது நிறைவடைந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து நாங்கள் நட்புடன் இருப்போம்"" என்றார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!