
24ம் தேதி அபர்ணா தாஸ் திருமணம் : மஞ்சும்மேல் பாயை மணக்கிறார்
அபர்ணா தாஸ் தன் காதலையும், திருமணத்தையும் ஏற்கெனவே அறிவித்து விட்டார். அவரது திருமணம் வருகிற 24ம் தேதி கேரளாவின் வடக்கன்சேரியில் நடக்கிறது. எளிமையாக நடக்கும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்.
அபர்ணா தாஸ் மணக்க இருப்பது மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் தீபக் பரமோளை. 2018ம் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் "மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்" படத்தின் மூலமாக அறிமுகமானவர் தீபக் பரம்போள். தட்டத்தின் மறையத்து, திரா, கண்ணூர் ஸ்குவாட் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திலும் பாய்சில் ஒருவராக நடித்திருந்தார். ரசிகர்கள் இருவருக்கும் இப்போதே வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!