
தாமரைக்கு அடித்த லக் : அடுத்தடுத்து படங்களில் பிஸி
அக் 12, 2022
Advertisement
பிக்பாஸ் சீசன் 5, டைட்டில் வின்னர் ராஜூ முதல் ப்ரியங்கா, அமீர்-பாவ்னி என பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த லக்கும் வொர்க் அவுட் ஆனது தாமரைக்கு தான் என்றே சொல்ல வேண்டும். பிக்பாஸ் ஜோடிகள் 2 முடிந்த கையோடு தாமரை வரிசையாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் ரோபோ ஷங்கர் மற்றும் சிங்கம் புலியுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதன்பிறகு வையாபுரியுடன் மலையால மூவி என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்நிலையில், நடிகர் சரத்குமார் நடிக்கும் "ஆழி" படத்திலும் தாமரை கமிட்டாகியுள்ளார். ஆழி படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், படத்தில் தனது கெட்டப்பையும் ரிவீல் செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் தாமரை. தாமரையின் இந்த படிப்படியான வளர்ச்சிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!