
ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே ஒரு தலைவர் : அனிருத் பதிவு
மேலும் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ தலைமுறை தலைமுறையாக நமக்கு அளவற்ற மகிழ்ச்சி, சிரிப்பு, சிலிர்ப்பூட்டும் தருணங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளை அள்ளித் தந்தவர். 76 வயதிலும், 51 ஆண்டுகளாக, இப்போதும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தி சரித்திரத்தை மாற்றி எழுதி வருகிறார்.
நாளை, 172-வது முறையாக மீண்டும் ஒருமுறை திரையரங்குகளில் விளக்குகள் அணைய, வெள்ளித்திரை தீப்பற்றிக் கொள்ள, உங்கள் அனைவரின் வாழ்த்துகளோடு ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயங்களிலும் வாழும் ஒரு மாமனிதர் மீதான அன்பை இந்த உலகம் மீண்டும் காணப்போகிறது.
ஒரே ஒரு சூரியன். ஒரே ஒரு சந்திரன். ஒரே ஒரு தலைவர். நாளை முதல் ஜெயிலர் 2. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்"" என குறிப்பிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…