
தி ராஜா சாப் தோல்வி : தயாரிப்பாளர் சொன்ன காரணம்
அப்படத்தைத் தயாரித்த பியூப்புள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள "கரிவிடி லட்சுமி" என்ற படம் அக்டோபர் 17ல் வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்கான பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் டிஜி விஸ்வபிரசாத்திடம், "தி ராஜா சாப்" தோல்வி குறித்து கேட்டனர்.
அதற்கு விஸ்வபிரசாத், “நாங்கள் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறோம். என்னை தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் படத்தை வெளியிட்டதுதான் நாங்கள் செய்த அடிப்படை தவறுகளில் ஒன்று. வேறொரு தேதியில் படம் வெளியாகி இருந்தால், அதன் முடிவு வேறாக இருந்திருக்கும். இப்போதைக்கு நாங்கள் "கரிவிடி லட்சுமி"யை ரசித்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து ரசிப்போம்,” என்று கூறியுள்ளார்.
பொங்கல் சமயத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த "மனஷங்கர வரபிரசாத் காரு" படம் பெரிய வெற்றியைப் பெற்று 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அந்த சமயத்தில் மொத்தம் 5 தெலுங்குப் படங்கள்தான் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அதையே தான் என தயாரிப்பாளர் சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!