‛டாடா இயக்குனர் இயக்கத்தில் ஜெயம் ரவி
அக் 03, 2024
Advertisement
கடந்த ஆண்டில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்து வெளிவந்த படம் "டாடா". இப்படம் வெற்றி பெற்றது தொடர்ந்து அடுத்து இவர் ஜீவா, துருவ் விக்ரம் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான முயற்சிகளும் நடந்து வந்தன. இந்த நிலையில் கணேஷ் கே பாபு அடுத்து நடிகர் ஜெயம் ரவியை வைத்து தான் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே முடிந்துவிட்டன. அடுத்து அவர் தனி ஒருவன் 2 படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தனி ஒருவன் 2விற்கு முன்பே கணேஷ் கே பாபு படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!