
அடுத்தடுத்து மூன்று படங்களில் முத்திரை பதித்த ஸ்வாசிகா
15 வருடங்களுக்குப் பிறகு 2024ல் வெளிவந்த "லப்பர் பந்து" படம் மூலம் தமிழக ரசிகர்கள் யார் இவர், இவ்வளவு யதார்த்தமாக நடிக்கிறாரே என பேச ஆரம்பித்தனர். அதன்பின் தமிழில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தன. கடந்த வருடம் வெளிவந்த "ரெட்ரோ, மாமன்" ஆகிய தமிழ்ப் படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
இந்த வருடம் வெளிவந்த "கருப்பு" படத்தில் அவரது கதாபாத்திரம் குறைவான நேரம் வந்தாலும் கவனத்தை ஈர்த்தது. அதற்கடுத்து விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த "நூறு சாமி" படத்தில் கதையின் நாயகியாக நடித்து அவரைப் பற்றிப் பேச வைத்தார். சமீபத்தில் வெளியான தெலுங்குப் படமான "இருமுடி" படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார்.
இடைவெளி விட்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறப்பான கதாபாத்திரங்கள் அவரைத் தேடிப் போகிறது. அவரும் தன் யதார்த்த நடிப்பில் தனி முத்திரை பதித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!