
மமிதா பைஜு, ஸ்வாசிகா வெற்றியைக் கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன் படக்குழு
இப்படத்தில் நடித்து வரும் மமிதா சமீபத்தில், தமிழில் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படத்திலும், மலையாளத்தில் "பெத்லகேம் குடும்ப யூனிட்" படத்திலும் நடித்துள்ளார். இரண்டு படங்களுமே பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
அது போல இப்படத்தின் மற்றொரு நடிகையான ஸ்வாசிகா நடித்து கடந்த வாரம் தெலுங்கில் வெளிவந்த "இருமுடி" படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.
மமிதா, ஸ்வாசிகா ஆகியோரது வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கேக் வெட்டியுள்ள பிரதீப் ரங்கநாதனின் "பிஆர் ஷோ" நிறுவனத்தின் இந்த முதல் தயாரிப்புக் குழு. இந்தக் கொண்டாட்டத்தில் பிரதீப்பும் கலந்து கொண்டு, மமிதா மற்றும் ஸ்வாசிகாவை வாழ்த்தினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!