
முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ருக்மணி வசந்த்
"ஏஸ், மதராஸி, காந்தாரா சாப்டர் 1" உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். சமீபத்தில் வெளியான "டாக்சிக்" படத்திலும் கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ள இவர், மலையாளத்தில் தற்போது நிவின்பாலி ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னடத்தில் "மங்கள கவுரி" என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ருக்மணி வசந்த்.
இதில் அவர் முதன்முறையாக ஒரு காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் போலீஸ் யூனிபார்முடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இவருடன் கன்னட சீனியர் நடிகையான மாலாஸ்ரீயும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மாலாஸ்ரீ, மங்களா கதாபாத்திரத்திலும், ருக்மணி வசந்த், கவுரி கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!