
தயாரிப்பாளரான பிரதீப் ரங்கநாதன்
பிஆர் ஷோ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி உள்ளார். முதல் படத்தை இவரிடம் உதவியாளராக இருந்த 6 பேர் குழுவாக இணைந்து ‛தி ஆல்பா யூனிட்" என்ற பெயரில் இயக்குகின்றனர். இந்த படத்தின் கதையை பிரதீப்பே எழுதி உள்ளார். இது நாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படம் என கூறப்படுகிறது. நாயகிகளாக மமிதா பைஜூ, ஸ்வாசிகா மற்றும் புதுமுகம் அனாமிகா மஹி ஆகியோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த கூட்டணியில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் உள்ளார். அவர் நடிக்கலாம் என தெரிகிறது.
விரைவில் இந்த படம் துவங்க உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!