ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் : உறுதி செய்த தயாரிப்பாளர்
ஜூலை 06, 2026
Advertisement
தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் நெல்சன். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆரை இயக்க உள்ளதாக ஒரு வருடத்திற்கு முன்பே செய்திகள் வெளிவந்தன.
ஆனால், கடந்த சில நாட்களில் அப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்குப் பதிலாக சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் பரவியது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் - நெல்சன் படத்திற்காக முன்பணத்தைக் கொடுத்துள்ள தயாரிப்பாளர் நாக வம்சி அது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நெல்சன் எனது அபிமான இயக்குனர்களில் ஒருவர். அவருடன் எதிர்காலத்தில் நிச்சயம் பணியாற்றுவோம். என்டிஆர் படத்திற்காக முன்பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. என்டிஆர் எப்போது தேதிகளைத் தருகிறாரோ அப்போது படம் ஆரம்பமாகும் என்று கூறியுள்ளார்.
ஜூனியர் என்டிஆரை நெல்சன் இயக்கப் போவதை உறுதி செய்துள்ளார் தயாரிப்பாளர்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!