
சூட்சுமதர்ஷினி தயாரிப்பாளர்களின் புதிய படம் தூமகேது; கதாநாயகி நிகிலா விமல்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் "சூட்சுமதர்ஷினி" திரைப்படம் வெளியானது. நடிகை நஸ்ரியாவிற்கு கிட்டத்தட்ட "கம்பேக்" என்று சொல்லும் விதமாக இது வெற்றிப் படமாக அமைந்தது. இயக்குநரும் நடிகருமான பசில் ஜோசப் இந்த படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருந்தார். இந்த படத்தை தயாரித்த சமீர் தாஹிர், சைஜு காலித், சஜின் அலி உள்ளிட்டோர் தற்போது "தூமகேது" என்கிற புதிய படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்க, "ஆவேசம்" படத்தில் பஹத் பாசிலின் பாடிகார்டாக நடித்த சஜின் கோபு மற்றும் ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குநர் சுதி மேடிசன் இயக்குகிறார். இந்தப்படம் குறித்த் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!