
டிசம்பர் 30ல் வெளியாகும் சன்னி லியோனின் ‛ஓ மை கோஸ்ட்
டிச 17, 2022
Advertisement
யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் படம் ஓ மை கோஸ்ட். ராணி மற்றும் பேய் என இரண்டு விதமான கேரக்டரில் சன்னி லியோன் நடித்துள்ளார். அவருடன் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. படப்பிடிப்பு முடிந்து சில மாதங்களாக கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஓ மை கோஸ்ட் படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திரிஷா நடித்துள்ள ராங்கி, விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன், பிரபு சாலமன் இயக்கியுள்ள செம்பி போன்ற படங்களும் திரைக்கு வருகின்றன.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!