
ரஜினியின் முத்து படத்தை முந்தி ஜப்பானில் புதிய சாதனை படைத்த ஆர்ஆர்ஆர்
அந்தவகையில் ஜப்பான் பாக்ஸ் ஆபிஸில் இப்போது வரை இப்படம் 410 மில்லியன் யென் வசூலித்து இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.24.85 கோடி. இது குறித்த தகவலை ஆர்ஆர்ஆர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜப்பானில் வெளியான இந்திய படங்களில் ஆர்ஆர்ஆர் பட வசூல் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான முத்து படம் தான் ஜப்பானில் ரூ.22 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து இருந்தது. தற்போது அந்த சாதனையை ஆர்ஆர்ஆர் படம் முறியடித்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!