இளம் நடிகருடன் காதல் கதையில் நடிக்கும் ஸ்மிருதி வெங்கட்
ஜூன் 06, 2023
Advertisement
வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஸ்மிருதி வெங்கட். "தடம்" படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டில் மட்டும் மாறன், மன்மதலீலை, குற்றம் குற்றமே, தேஜாவு படங்களில் நடித்தார். தற்போது அவர் "தேஜாவு" இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசனுடன் மீண்டும் இணைந்து "தருணம்" என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவர் ஜோடியாக "முதலும் நீ முடிவும் நீ" படத்தில் நடித்த கிஷன் தாஸ் நடிக்கிறார். இவர் ஸ்மிருதி வெங்கட்டை விட ஒரு சில வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார், தர்புகா சிவா இசை அமைக்கிறார்.
“இந்த படம் மெச்சூர்டான ஒரு காதல் கதை. இந்த படத்தில் 60 காட்சிகள் என்றால் அதில் ஒரு காட்சியைகூட முந்தைய எந்த படத்திலும் பார்த்திராத காட்சியாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். படத்தை ஷென் ஸ்டூடியோ சார்பில் புகழ், மற்றும் ஈடன் தயாரிக்கிறார்கள்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…