
அதிதி பற்றி கேட்பது தனிப்பட்ட வாழ்க்கை: சித்தார்த் பதில்
சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதரியும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்துள்ளன. இருவரும் ஜோடியாக இருக்கும் சில புகைப்படங்களும் கூட வெளியாகின. இரு தினங்களுக்கு முன்பு சர்வானந்த் திருமணத்தில் கூட சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி கலந்து கொண்டனர். அவர்கள் இணைந்து நடித்த "மஹா சமுத்திரம்" படத்திலிருந்துதான் சித்தார்த், அதிதி இடையே காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள்.
44 வயதான சித்தார்த் இதற்கு முன்பு திருமணமாகி விவாகரத்தானவர். அதன்பின் சில வருடங்களுக்கு முன்பு அவரும், நடிகை சமந்தாவும் காதலிப்பதாகச் செய்திகள் வந்தன. இருவரும் காளஹஸ்தி கோயிலுக்குக் கூட சென்று பூஜை செய்தார்கள். அதன்பின் திடீரெனப் பிரிந்தார்கள். பின்னர் சமந்தா, நாகசைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டு, பிரிந்தும் விட்டார்.
சித்தார்த் நடித்து இந்த வாரம் "டக்கர்" படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. தெலுங்கில் அப்படத்திற்காக நிறைய புரமோஷன்களைச் செய்து வருகிறார் சித்தார்த். அப்போது அவரிடம் அதிதி பற்றிய கேள்விக்கு, ""சில விஷயங்கள் தனிப்பட்டதாக இருக்க வேண்டும்,” என்று பதிலளித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!