
ரஜினி, சூர்யா படங்கள் பார்த்து நடிக்க வந்தேன் : சுனைனா
தற்போது அவர் முதன் முறையாக சோலோ ஹீரோயினாக "ரெஜினா" என்ற படத்தில் நடித்திருக்கிறார். தனக்கு ஏற்பட்ட ஒரு கொடுமைக்காக ஒரு சாதாரண பெண் அசாதாரண பெண்ணாக மாறி எப்படி பழி தீர்க்கிறார் என்பது மாதிரியான கதை. படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு சுனைனா பேசியதாவது:
சின்ன வயதில் இருந்தே சினிமாதான் எனது கனவாக இருந்தது. அதற்கு காரணமே தென்னிந்திய படங்கள்தான். அவற்றைத்தான் நான் சின்ன வயதில் இருந்தே விரும்பி பார்த்து வந்தேன். குறிப்பாக ரஜினி, சூர்யா படங்களை பார்த்து பிரமித்து வளர்ந்தேன். வெங்கட் பிரபு இயக்கிய "சரோஜா" படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். எனக்கு ஏதாவது கவலை வந்தால் அந்த படத்தில் பிரம்மானந்தம் நடித்த காட்சிகளை பார்ப்பேன். மக்கள் இப்போது நல்ல கதையம்சமுள்ள படங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!