
திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன்
ஜூன் 30, 2022
Advertisement
பிரபாஸ் ஜோடியாக தற்போது சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தை கே.ஜி.எப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதையடுத்து அழுத்தமான கதாபாத்திரத்திங்களில் நடிப்பதற்காக கதை கேட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், திருமணம் குறித்து வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிகா என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதனால் கூடிய சீக்கிரமே ஸ்ருதிஹாசன் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நேரத்தில் திருமணம் குறித்து எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. அந்த கேள்விக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதோடு காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் சுமுகமான உறவு இருந்து கொண்டிருப்பதாகவும் எங்கள் உறவு வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!