
பிளாஷ்பேக் : ஹாலிவுட்டில் இருந்து வந்த தாயம்மா
தமிழில் "சுட்டிக்குழந்தை" என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இதேபோன்ற ஒரு நிகழ்வு அதற்கு முன்பே நடந்தது. 1987ம் ஆண்டு ஹாலிவுட் திரைப்படமான "திரீ மென் அன்ட் எ கிரேடில்" (3 இளைஞர்களும் ஒரு தொட்டிலும்) என்ற படத்தை தழுவி தமிழில் "தாயம்மா" என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. இத்திரைப் படத்தை கோபி பீம்சிங் இயக்கியிருந்தார். பாண்டியன், ஆனந்த் பாபு ஆகியோருடன் கீதாவும் ஒரு தலை ராகம் சங்கரும் நடித்திருந்தனர். இப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தனர்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இளைஞர்களான பாண்டியன், ஆனந்த் பாபு ஆகியோர் நண்பர்களாகவும் அறைத் தோழர்களாகவும் இருக்கின்றனர். ஐஏஎஸ் படிக்கும் ரங்கராஜன் இவர்களது பக்கத்து வீட்டுக்காரர். ஒருநாள், பாண்டியனும், ஆனந்த் பாபுவும் தங்கள் வீட்டு வாசலில் ஒரு குழந்தையைக் கண்டெடுக்கின்றனர். மூன்று இளைஞர்களும் அவளுக்கு தந்தை இல்லை என்று நம்புகின்றனர். அப்போதிருந்து, அவர்களின் வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது. முதலில் குழந்தையை கைவிட முயல்கிறார்கள, பின்னர் குழந்தையை கவனித்து "தாயம்மா" என்று பெயரிடுகிறார்கள். பின்னர் என்ன நடக்கிறது என்பது கதை. இந்த கதை மலையாளத்தில் "தூவல்சுபர்சத்" என்ற பெயரில் தயாரானது. மலையாளத்தில் வந்த படத்தை தான் தமிழில் ரீமேக் செய்தனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!