
குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன்
ஜூலை 12, 2025
Advertisement
சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், திருமணம் செய்து கொள்வது குறித்து இன்னும் யோசிக்கவே இல்லை. ஒருவேளை திருமணமே செய்யாமல் கூட சிங்கிளாக வாழ்வேன். எதிர்காலத்தில் என்ன நடக்குமோ யாருக்கு தெரியும் என்று கூறியிருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், பலமுறை காதலித்தாலும் அந்த காதல் திருமணம் வரை செல்லாமல் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த தோல்விக்கு ஒருபோதும் நான் காரணம் அல்ல. அதோடு எப்போதுமே நான் அம்மாவாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன். என்றாலும் ஒரு குழந்தைக்கு இரண்டு பெற்றோர் வேண்டுமே. அப்போதுதான் அது சிறந்ததாக இருக்கும். அதனால் குழந்தையை தத்து எடுத்து வளர்க்கலாம் என்று கூட நான் யோசித்து வருகிறேன் என கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!