
எதிர்மறை விமர்சனங்களால் துல்கருடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தேன் ; ஐஸ்வர்ய லட்சுமி
மலையாள திரை உலகில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் நடிப்பு திறமை கொண்ட ஒருவர் தான் ஐஸ்வர்ய லட்சுமி. சமீபத்தில் வெளியான "கட்டா குஸ்தி 2" படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார். இந்த வார இறுதியில் மலையாளத்தில் ஊர்வசியுடன் இவர் இணைந்து நடித்துள்ள "ஆஷா" திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் ஜோடியாக "கிங் ஆப் கொத்த" படத்தில் இணைந்து நடித்த போது தான் சந்தித்த கேலி, கிண்டல் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் தன்னை எந்த அளவு பாதித்தன என்று மனம் திறந்து கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.
இது குறித்து அவர் கூறும்போது, “கிங் ஆப் கொத்த படத்தில் நான் பேசிய வசனங்கள் குறிப்பாக துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தை ராஜூவேட்டா என்று அழைத்தது இணையதளத்தில் கேலிக்குள்ளானது. என் நடிப்பு குறித்து அந்த படத்தில் சில விமர்சனங்கள் நியாயமானவை என்றாலும் இன்னொரு படப்பிடிப்பு தளத்தில் ஒரு உதவி இயக்குனரே என்னை ராஜூவேட்டா என்று அழைத்து கிண்டல் செய்தது மன வேதனையை தந்தது. அதன் பிறகு துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளை மறுக்கத் தொடங்கினேன்.
இந்த ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் விதமாக தயாரான ஒரு விளம்பர படத்தில் கூட துல்கர் சல்மான் உடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் என் மீதான எதிர்மறை விமர்சனங்கள் அந்த விளம்பர படத்தை பாதித்துவிடக் கூடாது என்பதற்காக அதில் நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தேன்” என கூறியுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!