
ஹீரோவாக அடுத்த வெற்றியைப் பெறுவாரா சூரி?
தமிழ் சினிமாவில் காமெடியான இருந்து ஹீரோவாக உயர்ந்தவர்களில் சூரியும் ஒருவர். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த "விடுதலை" படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். அந்தப் படம் அவருக்கு தனித்த ஒரு அடையாளத்தைத் தந்தது.
அதற்கடுத்து அவர் ஹீரோவாக நடித்து 2024ல் வெளிவந்த படங்களான "கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2" ஆகிய படங்களும், கடந்த வருடம் 2025ல் வெளிவந்த "மாமன்" படமும் அவருக்கு வரவேற்பைத் தந்தன. இப்படம் சுமார் 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்து லாபத்தைத் தந்த படமாக அமைந்தது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்தப் படத்தில் மட்டுமே நடித்து வந்தார் சூரி. கடலும் கடல் சார்ந்த இடத்தின் கதையாக இப்படம் உருவாகி உள்ளது. மதிமாறன் புகழேந்தி இயக்க, ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க, சுஹாஸ், மகிமா நம்பியார் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ளது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாக உள்ள இப்படத்திற்கு தெலுங்கு இயக்குனர்கள், நடிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும், தெலுங்கில் மைத்ரி மூவி நிறுவனமும் இப்படத்தை வெளியிடுகின்றன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தொடர்ந்து ஹீரோவாக வெற்றி பெற்று வரும் சூரிக்கு இந்தப் படமும் வெற்றியைத் தந்தால் அவரது வியாபார எல்லை இன்னும் விரிவடையும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!