
நிவேதிதா சதீஷ் திருமணம்: நீண்ட நாள் காதலரை மணக்கிறார்
"சில்லுக்கருப்பட்டி" படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நிவேதிதா சதீஷ். "இந்த நிலை மாறும், செத்தாலும் ஆயிரம் பொன், உடன்பிறப்பே, கேப்டன் மில்லர், மின்மினி, ஓ பட்டர்பிளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். "சுழல்" உள்ளிட்ட சில வெப் தொடர்களில் நடித்துள்ளார்.
நிவேதிதா சதீஷ் தனது நீண்ட நாள் காதலனான சுஹைப் முகமத் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இருவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்த ஆண்டின் இறுதியில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!