
ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத்
ஜூலை 12, 2025
Advertisement
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் இசையமைத்து வரும் அனிருத், மற்ற இசையமைப்பாளர் இசையிலும் பின்னணி பாடி வருகிறார். குறிப்பாக தெலுங்கில் யுடர்ன், கேம் லீடர், தேவரா, கிங்டம் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் அனிருத். இந்நிலையில் தற்போது ஆந்திரா கிங் தாலுகா என்ற படத்துக்கு அப்படத்தின் நாயகனான ராம் பொத்தினேனி ஒரு பாடல் எழுதியுள்ளார். அந்த பாடலை விவேக், மெர்வின் இசையில் அனிருத் பின்னணி பாடி இருக்கிறார். இந்த படத்தை மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தை இயக்கிய மகேஷ் பாபு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. உபேந்திராவின் தீவிர ரசிகராக ராம் பொத்தினேனி நடித்து வரும் இந்த படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் நாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!