அதிக சம்பளம் : இரண்டாவது இடத்தைத் தொட்ட சமந்தா
மார் 05, 2022
Advertisement
தென்னிந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா இருக்கிறார். ஒரு படத்திற்கு அவரது சம்பளம் 5 கோடி என்கிறது கோலிவுட் வட்டாரம். சில வருடங்களுக்கு முன்பே 3 கோடி சம்பளத்தைத் தொட்ட நயன்தாரா கடந்த சில படங்களாக 5 கோடி வரை வாங்கி வருகிறார்.
அவருக்கு அடுத்த இடத்தில் சில நடிகைகள் இருந்தாலும் அவர்களது அதிகபட்ச சம்பளம் ஒரு படத்திற்கு 2 கோடி வரைதான் இருந்தது. இப்போது நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சென்னையிலிருந்து ஐதராபாத்திற்குச் சென்று தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா பிடித்துள்ளார்.
தற்போது "சாகுந்தலம் (தெலுங்கு), காத்து வாக்குல ரெண்டு காதல்" ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார் சமந்தா. அடுத்ததாக முதன்மைக் கதாநாயகியாக அவர் நடிக்க இருக்கும் "யசோதா" படத்திற்கு சம்பளம் 3 கோடியாம்.
"புஷ்பா" படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ஒன்றரை கோடி சம்பளம் வாங்கினார் சமந்தா. அதைக் கேட்டவுடன் தயாரிப்பு நிறுவனம் கொடுத்துவிட்டதால்தான் புதிய படத்திற்கு இவ்வளவு சம்பளம் என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!