
நான் எதிலும் தோற்றுப்போவதில்லை : புகழ் பதிவு
ஆனால், சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்த பின்னும் இன்னும் பாராட்டுக்களைப் பெறாமல் இருக்கிறார் புகழ். சந்தானம் நடித்து வெளிவந்த "சபாபதி" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்கடுத்து "என்ன சொல்லப் போகிறாய்" படத்திலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார். இரண்டு படங்களிலும் அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை.
அடுத்து கடந்த வாரம் வெளிவந்த அஜித் நடித்த "வலிமை" படத்திலும் ஒரே ஒரு காட்சியில் நடித்தார். அதுவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. அடுத்த வாரம் வெளியாக உள்ள "எதற்கும் துணிந்தவன்" படத்திலாவது பேசப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், “நான் எதிலும் தோற்றுப்போவதில்லை! ஒன்று வெற்றி கொள்கின்றேன், இல்லை கற்று கொள்கின்றேன்,” என தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதிவுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!