
உண்மையை உடைக்கப் போகிறேன் - எஸ்.ஏ.சந்திரசேகர்
ஆக 23, 2021
Advertisement
விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், ‛யூ-டியூப்" சேனல் ஒன்றை துவக்கியுள்ளார். இதில் அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர உள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரோனாவால் சினிமா உலகமே இருண்டு விட்டது. என்னை நான் எப்போதுமே புத்துயிராக வைத்துக் கொள்ள சினிமா மூலம் உங்களுடன் பேசி வந்த நான், இனி இந்த சேனல் மூலம் பேச உள்ளேன். இதுவரை 70 படத்தை இயக்கியுள்ளேன். பலரை அறிமுகப்படுத்தியுள்ளேன். சாதிக்க நினைக்க உள்ள இளைஞர்களுக்கு என் வாழ்க்கை பாடமாக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த முயற்சி. பல உண்மைகளை உடைத்து சொல்லப்போகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!