
மானிய தொகை - தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்
தமிழகமெங்கும் உள்ள திரை உலக ரசிகர்கள் சிறிது இடைவெளிக்கு பிறகு திரையரங்கை நோக்கி வர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக முதல்வர் அவர்களுக்கு தமிழ் திரை உலகின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், குறைந்த முதலீட்டில் தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்படங்களுக்கான மானியத் தொகைக்கு அரசாங்கத்திற்கு விண்ணப்பித்துள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மானிய தொகையினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வாழ வைக்க வேண்டுமாய் இருகரம் குவித்து கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!