
ஆண் குழந்தைக்கு அப்பாவான நடிகர் ஆர்.கே.சுரேஷ்
ஜன 22, 2023
Advertisement
தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக இருந்த ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்படவே அடுத்தடுத்து பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு மது லதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஆர்.கே.சுரேஷுக்கு 2001ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவலை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதோடு, குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகவும், கடவுள் அருளால் தற்போது தனது மகன் நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ள ஆர்.கே.சுரேஷ், அனைவரும் தனது மகனுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!