
பாலிவுட்டில் கால் பதிக்கும் அர்ஜூன்தாஸ்
இந்த நிலையில் இயக்குநர் மதுமிதா, அர்ஜூன்தாஸை பாலிவுட்டிற்கு அழைத்துச் செல்கிறார். மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "அங்கமாலி டைரீஸ்" படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார் மதுமிதா. இதில் நாயகனாக நடித்திருக்கிறார் அர்ஜூன்தாஸ். அதோடு தனது தனித்துவமான குரலில் ஹிந்தியில் டப்பிங்கும் பேசியிருக்கிறாராம்.
இதுகுறித்து மதுமிதா கூறும்போது "நானும் அர்ஜுன் தாஸும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் பணியாற்றி இருக்கிறோம். அது "அங்கமாலி டைரீஸின்" ஹிந்தி வெர்ஷன். ஆனால் இந்தப் படம் ரீமேக் கிடையாது. அடாப்டேஷன் படம். நிறைய விஷயங்களை மாற்றியிருக்கிறோம். நான் எப்போதும் ரீமேக் படங்களை எடுக்க மாட்டேன். ஒரு இயக்குநர் எடுத்த அதே படத்தை மீண்டும் எடுப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப்போகிறது. அர்ஜுன் தாஸின் முதல் ஹிந்தித் திரைப்படம். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…