தமிழுக்கு வரும் திவிஜா பிரபாகர்
நவ 14, 2026
Advertisement
பிரபல தெலுங்கு நடிகர் "ஈடிவி" பிரபாகரின் மகள் திவிஜா. பாடகியான இவர் பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டிருக்கிறார். "வெங்கட்ராமய்யாகாரி தாலுகா" என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு பிரம்மா ஆனந்தம், ஹே சிக்கித்தா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தோலு பொம்மலு என்ற ஓடிடி தொடரிலும் நடித்தார்.
இந்த நிலையில் தமிழுக்கு வருகிறார் திவிஜா. ரங்கோலி மற்றும் மெட்ராஸ்காரன் படத்தை இயக்கிய வாலிமோகன்தாஸ் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார். நாயகனாக டீஜே அருணாசலம் நடிக்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியா பிலிம் கம்பெனி, ஸ்ரீசுமனோகரா புரொடக்ஷன், கிராட்டிடியூட் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…