படப்பிடிப்பின் போது ரித்திகா சிங்கிற்கு கைகளில் காயம்
டிச 05, 2023
Advertisement
இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக அறிமுகமானவர் குத்துச் சண்டை வீரங்கானையான ரித்திகா சிங். தொடர்ந்து ‛ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, கொலை" போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஞானவேல் இயக்கும் ரஜினியின் 170வது படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் இவருக்கு கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த போட்டோவை பகிர்ந்து, ‛‛இதை பார்க்கையில் நான் ஒரு ஓநாய் உடன் சண்டை போட்டது போல் தெரிகிறது"" என குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு வீடியோவில், ‛‛அங்கு கண்ணாடி இருக்கிறது கவனமாக இருங்கள் என்றார்கள். நான் பொருட்படுத்தவில்லை. சில நேரம் நம்மால் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் கட்டுப்பாட்டை இழந்ததால் இப்படி நிகழ்ந்தது. வலிக்கவில்லை என்றாலும் காயம் ஆழமாக இருக்கிறது. மருத்துவமனை செல்கிறேன், விரைவில் சரியாகும் என நம்புகிறேன்"" என தெரிவித்துள்ளார்.
எந்த படப்பிடிப்பில் இது நிகழ்ந்தது என ரித்திகா சிங் குறிப்பிடவில்லை. ஆனால் இது ரஜினி படத்தில் நிகழ்ந்த காயம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!